“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

Archive for the ‘அறிவிப்பு’ Category

ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க? ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் மனம் கவர்ந்த ‘ஓகே என் கள்வனின் மடியில்’ கதை இன்னும் சில நாட்களில் புத்தக வடிவில் உங்கள் கைகளில் தவழ இருக்கிறது. இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய MS Publications-க்கும் பிரியங்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கவர் மாதிரியே கதையும் கலர்புல் அண்ட் ஜாலி லவ் ஸ்டோரி தான். இதுக்கு வந்த விபிஆரின் கமெண்ட்ஸ் செம கலக்கல். இந்தக் கதையை ப்ளாகில்படித்து பின்னூட்டம் இட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. அதே ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

தமிழ் மதுரா.

 

book-1-wrapper-1

Advertisements

நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்

வணக்கம் தோழமைகளே,

நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஸ்டால் எண் 255, 256 ல் இந்த இரு புத்தகங்களும் கிடைக்கும்.

அடுத்த நன்றி என் தோழி சாரதாவுக்கு. மிகுதியான வேலைப்பளுவால் ப்ரூப் ரீடிங் கூட செய்ய முடியாமல் இருந்த சமயம் ஒரு catalyst போன்று ஸ்பீட் அப் பண்ணியவர் அவர்தான். மிக்க நன்றி ஷாரதா.

புத்தகம் எப்ப எப்ப என்று துளைத்தெடுத்த தோழிகள் படித்துவிட்டு தங்களது ரிவியூவைத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு உங்கள் அன்பை என்றும் வேண்டும் உங்கள் தோழி

தமிழ் மதுரா.

புத்தக அட்டைப் படங்கள்

Nilavu Oru Pennagi

 

Kadhal Varam

Image

ஒகே என் கள்வனின் மடியில் – விரைவில்

ஓகே என் கள்வனின் மடியில்

உன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்

வணக்கம் பிரெண்ட்ஸ்,

ப்ரித்வி, நந்தனாவுடன் பானுப்ரியாவும் உங்களை சந்திக்க வருகிறாள். உங்கள் மனம் கவர்ந்த நாவல்கள் ‘உன்னிடம் மயங்குகிறேன்’ மற்றும் ‘வார்த்தை தவறிவிட்டாய்’  ஒரே புத்தகமாக ‘மூவர் நிலையம்’ பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருகிறது. உடுமலையில் இந்தப் புத்தகம் கிடைக்கும். ப்ளாகில் தந்த ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

vtvi

அன்புடன்,

தமிழ் மதுரா.

கடவுள் அமைத்த மேடை

கடவுள் அமைத்த மேடை – புதிய கதை விரைவில்

வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்

வணக்கம் பிரெண்ட்ஸ்,

உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல்   ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி  பானுப்ரியாவுக்கு ப்ளாகில் அளித்த வரவேற்பினை புத்தக வடிவிலும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். வளரும் எழுத்தாளரான எனக்கு இந்த இனிய பொங்கல் பரிசினைத் தந்த ராணிமுத்து இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

வார்த்தை தவறிவிட்டாய் – விரைவில்

ஹலோ பிரெண்ட்ஸ்,

எல்லாருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள். கொலு எப்படிப் போகுது? உங்க வீட்டு கொலுவெல்லாம் முகநூல் புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன்.

எப்படி இருக்கிங்க? சித்ராங்கதா முடிஞ்சு புத்தகமும் வெளிவந்தாச்சு(கதையை  ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சுன்னு எனக்கே நம்ப முடியல).

இன்னமும் ஜிஷ்ணுவும் சரயுவும் உங்க நினைவை விட்டு அகலவில்லைன்னு எனக்கு நீங்க அனுப்பின தகவல்கள் மூலம் தெரிஞ்சுட்டேன். எங்களால சரயுவையும் ஜிஷ்ணுவையும் மறக்க முடியாதுன்னு நீங்க சொல்றது என் மனதில் ஒரு திருப்தியை தருகிறது. My purpose is to entertain myself first and other people secondly – John D. MacDonald

எனக்கு பிடிச்சதை நான் ரசிச்ச அதே அளவுக்கு நீங்களும் ரசிச்சதுக்கு நன்றி.

எனக்கு திருப்பதி லட்டு பிடிக்கும், Ferroro Rochet chocolate ரசிச்சு சாப்பிடுவேன் , எனக்குப் பிடித்த ரெஸ்டாரன்ட்டில்  Apple and almond crumbles அருமையா இருக்கும். இப்படி   ஒவ்வொண்ணும் ஒவ்வொரு டேஸ்ட்.  ஒண்ணு சாப்பிடும்போது மத்தது கூட கம்பேர் பண்ண மாட்டேன்.

நீங்கள்லாம் புத்திசாலியாச்சே…. சாப்பாட்டை பத்தி ஏன் சொன்னேன்னு உங்களுக்குப்  புரிஞ்சிருக்குமே….  ஆமாம், சித்ராங்கதாவை அங்கேயே பார்க் பண்ணிட்டு வாங்க.

விஜயதசமி அன்னைக்கு புதுஸா தொடங்கினா நல்லதாம்… நம்ம புது கதையை அன்னைக்கே தொடங்கிடலாமா? டைட்டில் பிடிச்சிருக்கான்னு பார்த்துட்டு  உங்க கமெண்ட்ஸ் பகிர்ந்துக்கோங்க செர்ரி ஃபைஸ்.

அன்புடன்,

தமிழ் மதுரா