“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

Archive for October, 2015

விநாயகர் சதுர்த்தி செய்திகள் – 2

விநாயகர் சதுர்த்தி சந்தோஷம் தரும் விஷயம் என்றாலும், அதன் பின் சிலையை ஆற்றிலோ கடலிலோ இல்லை நீர்நிலையிலோ கரைக்கிறோம். தற்காலத்தில் அழகுக்காக சேர்க்கப்படும் செயற்கை சாயங்களும், பிளாஸ்டர் ஆப் பாரிஸும் கரைவேனா என்று அடம்பிடித்து சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றன. இந்த வருடம் இதை மனதில் கொண்டு சிலர் கொண்டாடிய விதத்தைப் பற்றிப் பார்ப்போம்.

நவி மும்பையின் அக்ரோலி கிராமத்தில் நூறு குடும்பங்கள் சேர்ந்து ஒரே விநாயகர் சிலையை வைத்து வழிபடுகின்றனர். இது ஐம்பத்தி ஐந்து வருடங்களாக நடக்கிறதாம். கணேஷ சதுர்த்திக்காக கடன்வாங்கி கஷ்டப்படுவதைத் தடுக்க கிராம மக்கள் செய்த ஏற்பாடாம் இந்த கூட்டு வழிபாடு.

பெங்களூரில் பொறியியல் துறையில் பணிபுரியும் சஷி ஷா சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுவதைத் தடுக்க, வர்ணங்கள் எதுவும் பூசப்படாத இயற்கையான  களிமண் பிள்ளையார் சிலைகளை தயாரித்து விற்கிறாராம். ஆனால் விலை நானூறு ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு வாரத்துக்குப் பின்னர் வீட்டிலிருந்து விநாயகர் சிலையை வாங்கிச் சென்று இவர்களே கரைத்து விடுகிறார்களாம்.

The idols are made only with clay and no colour is used.\

பெங்களுரை விட இன்னும் ஒரு படி மேலே சிந்தித்த மும்பையின் ஆனந்த், விநாயகர் உருவத்தின் உள்ளே மீன்கள் உணவை அடைத்து விற்பனை செய்கிறாராம். கலருக்கு மஞ்சள், அரிசிமாவு, குங்குமம் போன்ற கெடுதல் விளைவிக்காத இயற்கை பொருட்களையே பயன்படுத்தி செய்திருக்கிறாராம். இதற்கு பலத்த வரவேற்பாம். ஆக மும்பை கடலில் நீந்தும் மீன்கள் கூட இனி ஆவலாய் விநாயகர் சதுர்த்தியை எதிர்பார்க்கும்.

Advertisements

விநாயக சதுர்த்தி செய்தி – 1

ஷாரதா கேட்ட மாதிரி நவராத்திரி ஸ்பெஷல் உண்டோ இல்லையோ நான் படிச்ச  விநாயகர் சதுர்த்தி செய்திகளை உங்க கிட்ட பகிர்ந்துகிறேன்.

12042774_898470626873412_116968633211130024_n

முதலில் நாம் பார்க்கப் போவது ‘ரிந்து கல்யாணி ரத்தோட்’ எனும் மும்பை பெண்மணி கணேஷ சதுர்த்தியைக் கொண்டாடும் விதம். கேக் மற்றும் பேக் செய்வதில் கைதேர்ந்த இவர் ‘ரினி பேக்ஸ்’ எனும் கேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம். இந்த வருடத்தில் ஸ்பைடர்மென், பாஹுபலி என்று பல அவதாரம் எடுத்த பிள்ளையார் இவரது கைவண்ணத்தில் சாக்லட்டில் வடிவமைக்கப் பட்டார். இந்த சிலையை முப்பத்தி ஐந்து கிலோவில்  வடிவமைக்க இவருக்கு ஐம்பது மணி நேரமானதாம்.

ஸ்பெஷலா போடுற அளவுக்கு இதில் விஷயமில்லையே என்று சொல்லும் நண்பர்களுக்கு. இந்த சிலையை விநாயக சதுர்த்தி முடிந்தவுடன் கடலில் கலப்பதில்லை. பதிலுக்கு பாலில் கரைத்து, நூற்றுக்கணக்கான  ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சாக்லேட் மில்க் என்று தருகிறார்.

உங்களின் நல்ல மனசுக்கு உங்க வாழ்க்கையும் சாக்லெட் மில்க் போல இனிப்பான இருக்கட்டும் ரிந்து.

நிலவு ஒரு பெண்ணாகி 19, 20

வணக்கம் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க? போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் பகுதியோடு ஆதிரன் சந்திரிகை கதை முடிகிறது. இரண்டு பகுதிகளையும் சேர்த்து சற்றே பெரிய பதிவாகத் தந்திருக்கிறேன்.

வீட்டில் அம்மாக்களைப் பார்த்திங்கன்னா  அழகாய் சாப்பாடு சமைச்சு பரிமாறி இருப்பாங்க. காலைல இருந்து கரெண்ட் இருந்திருக்காது. அதனால் அம்மியில் மசாலா அரைச்சிருப்பாங்க. குடிக்கத் தண்ணி இருந்திருக்காது. எங்கிருந்தோ வாங்கிட்டு வந்திருப்பாங்க. அவங்க பட்ட  சிரமங்கள் எதுவும் சாப்பிடும் நமக்குத் தெரியாது. அவங்களும் நம்ம முகத்தில் தெரிந்த திருப்தியைப் பார்த்தே அவர்கள் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்துவிடுவார்கள். அதைப் போலத்தான் நாங்களும். மற்ற அலுவல்களுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி  ஆர்வமாய்  எழுதுகிறோம். நீங்கள் படிக்கிறீர்கள்  என்று வியூஸில் தெரிகிறது. இருந்தாலும்  வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தோமோ என்று அறிந்து கொள்ளும்  ஆர்வம் எங்களுக்கும்  நிறைய உண்டு.

இனி பதிவுக்கு செல்வோம். படித்துவிட்டு முதல் பகுதியைப் பற்றி, ஆதிரன் சந்திரிகை பற்றி உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நிலவு ஒரு பெண்ணாகி 19,20

அடுத்த பகுதியில் மறுபடியும் ஆத்ரேயனும் சந்த்ரிமாவும் வருகிறார்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா