“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

Archive for September, 2015

காக்கும் கடவுள் கணேசனை நினை

Happy-Ganesh-Chaturthi-Wallpapers

தோழமைகள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

‘நிலவு ஒரு பெண்ணாகி’ தொடரை எழுதும்போது திடீர்னு எனக்கு ஒரு சந்தேகம். அதாவது காணபத்யத்தில் முழு முதல் கடவுளா பிள்ளையாரை சொல்றாங்க சரி… ஆனால் சாக்தம், சைவம், வைஷ்ணவம் (தும்பிக்கை ஆழ்வார்), கௌமாரம் இவற்றில் கூட முதலில் கணபதியைதான் வழிபடுறாங்க. இதுக்கு என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சேன். என் சந்தேகத்தை நீக்க தருமியா வருவார்… நானேதான் தேடணும். தேடினப்ப கிடைச்ச சுவையான சில விஷயங்களை பகிர்ந்துக்க விரும்புகிறேன்.

கணங்களுக்கு (திசைகளுக்கு) அதிபதி என்பதால் எல்லா திசைகளிலும் இருக்கும் தீமைகளை நீக்கி நன்மை தருபவர் .

பார்வதி கணேசனை படைத்தார் என்பதற்கு இன்னொரு பொருள் இந்த அண்ட சராசரம் பல அழிவுகளையும், புதிய தொடக்கத்தையும் சந்தித்துள்ளது. அழிவுக்குப் பின் முதலில் தோன்றுபவர் வினாயகரே.

கஜானனன் தான் பொருள் உலகிற்கும் அருள் உலகிற்கும் தலைவன். மாயையை நீக்கி இறைவனை நோக்கி முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்றால் தும்பிக்கையான் தயவால்தான் முடியும்.

நமது உடம்பிலிருக்கும் மூலாதார சக்ரத்தின் அதிபதி கணேசன். இந்த சக்கரம்தான் யோக நிலையின் முதல் படி. இதிலிருந்துதான் மற்ற ஆறு படிகள் கடந்து, பிறப்பு இறப்பு சங்கிலியிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைய முடியும்.

சங்ககாலத்தில் விநாயகரை மூத்த பிள்ளையார் என்றும் ஆறுமுக செவ்வேலை இளைய பிள்ளையார் என்றும் அழைப்பார்களாம்.

விநாயகருக்கு யானைத் தலையை பொருத்தி அந்தகாலத்திலேயே தலை மாற்று அறுவை சிகிச்சை செய்தவங்க நம்மன்னு சொல்றதுக்கு முன்னாடி எதனால் யானைத்தலை என்று கொஞ்சம் யோசிக்க சொல்றார் டாக்டர் அகர்வால். அவரே விளக்கமும் சொல்கிறார். யானை அறிவும் ஆற்றலும் தீர்க்க சிந்தனையும் உடையது. யானையின் காதுகள் பெரிது. பேச்சு குறைவாகவும், கேட்பது அதிகமாகவும் இருக்கவேண்டும் என்பது அதன் உட்பொருளாம். யானையின் கண்கள் சிறிது ஆனால் அவற்றின் பார்வை கூர்மையானது. அதுபோல நமது பார்வையும் நம் குறிக்கோளை நோக்கியே இருக்கவேண்டும். யானையின் தும்பிக்கை மரத்தை வேரோடு பிடுங்கி எறியும் அளவுக்கு ஆற்றல் பெற்றது. அதுபோல நாமும் கவலைகளை வேரோடு பிடுங்கி எறியும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்கிறார்.

எனவே இந்த இனிய நன்னாளிலே

நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் எனும் ஒலியது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் தவழ்பவன்
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவனருளே துணை.

என்று பணிந்து பிள்ளையாரின் அருளை பெறுவோம்.

அன்புடன்

உங்கள் தமிழ்மதுரா

Advertisements

நிலவு ஒரு பெண்ணாகி – 18

வணக்கம் தோழமைகளே,

அனைவருக்கும் என் உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

போன பகுதிக்கு பின்னூட்டம் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

இனி இன்றைய பகுதி. உமைபுரத்தினர் காட்டு வழி பயணம் மேற்கொண்டதை பார்த்தோம். அராளன் என்னவானான்… அவனது திட்டம் பலித்ததா இல்லை மீண்டும் முயல்கிறானா என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

விரைவில் பிளாஷ்பேக் முடியப் போகிறது. அந்தக் கால நாயகன் நாயகியான ஆதிரன் சந்திரிகை உங்களைக் கவர்ந்தார்களா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். சைலன்ட் ரீடர்ஸ் சிலராவது முன்வந்து கமெண்ட்ஸ் தருவார்கள் என்று எதிர்பார்கிறேன். உங்களது கருத்துக்களை எதிர்பார்ப்பது அந்தக் காலக் கட்டத்தை உங்கள் முன் கொண்டுவர நினைத்த என் சிறு முயற்சி பலனளித்திருக்கிறதா என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே. கமெண்ட்ஸில் தெரிவிக்க விருப்பமில்லாதவர்கள் வழக்கம்போல் மெயில் செய்யலாம்.

நிலவு ஒரு பெண்ணாகி – 18

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

நிலவு ஒரு பெண்ணாகி – 17

வணக்கம் தோழமைகளே,

அனைவருக்கும் உளம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். துர்காஷ்டமி சமயத்தில் உமைபுரத்தின் ஸ்ரீமேரு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

நிலவு ஒரு பெண்ணாகி – 17

அன்புடன்

தமிழ் மதுரா