“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

Archive for March, 2015

கடவுள் அமைத்த மேடை (Final Update)

ஹலோ பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு ஏறக்குறைய எல்லாருமே வரவேற்பளித்திருந்திங்க நன்றி நன்றி நன்றி.

‘பானுப்ரியா கணவனின் துரோகத்தை தாங்கிக் கொண்டு அவனுடன் வாழ்வதாக முடித்திருந்தீர்களே. ஷாலி என் இப்படி’ என்று ஒரு தோழி என்னிடம் கேட்டார். பானுப்ரியா 🙂 இவள் இன்னமும் உங்கள் மனதில் இருப்பது மகிழ்ச்சி. பத்து வருடம் கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து இரண்டு பிள்ளைகளுடன் நிறைவாக வாழ்க்கை வாழ்ந்தவள் .பூர்வஜாவைக் கணவனுடன்  பார்ப்பதற்கு முன்னர் வரை பிரகாஷின் துரோகம் அவளுக்குத் தெரியாது. அன்புக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என்று இருப்பது பிரகாஷுக்கு முடியலாம். நம் பானுவின் குணத்துக்கு பிரகாஷை விட்டு வேறு ஆணை அவளால் நினைத்துக் கூட  பார்க்க முடியாது.

வைஷாலி இன்னமும் வாழ்வே ஆரம்பிக்கவில்லை. சிவாவுக்கு ஆரம்பத்திலேயே வாழ்க்கை கருகிவிட்டது. இந்தக் கதைப்படி   இருவரும் திருமணம் செய்துக் கொள்வதில் தவறில்லை என்பது என் எண்ணம். காயமுற்ற இருமனங்களும் இனியாவது  தங்களுக்கான வாழ்க்கையை வாழட்டுமே.

இந்தக் கதையின் ஆரம்பத்தில்  இருந்து முடியும் வரை என்னுடன் பயணித்து, எனக்கு கமெண்ட்ஸ் மூலமும் மெயில் வழியாகவும், முகநூலிலும், தொலைப்பேசியிலும்  ஆதரவு தந்த ரசிகர்களுக்கு என் நன்றிகள்.  நன்றி டியர்ஸ். Thanks for your support.

இறுதிப் பகுதியைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடவுள் அமைத்த மேடை – 17

அடுத்த கதையில் மீண்டும் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

Advertisements

கடவுள் அமைத்த மேடை – 16

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு சிவபாலனின் பிளாஷ்பேக் முடிகிறது. இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் இப்போதாவது மௌனத்தை கலைக்கலாமே?

கடவுள் அமைத்த மேடை -16

கதையில் வந்த பாடல் வரிக்கான லிங்க்

அன்புடன்,

தமிழ் மதுரா

கடவுள் அமைத்த மேடை – 15

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

ஒரு முறை, எனது அலுவலகத்தில் வேலை கடுமையாக இருந்த சமயம், என்னுடன் வேலை செய்த பிற நாட்டை சேர்ந்த இரண்டு இளைஞர்களின் உரையாடல். அதில் ஒருவனுக்கு பெண்தோழியுடன் உறவு முறிந்ததால் சற்று கவலையாக இருந்தான்.

“வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. மிகவும் சோர்வாக உணர்கிறேன். வீட்டுக்குப் போகவும் பிடிக்கவில்லை. எல்லாம் வெறுப்பாக இருக்கிறது”

“பேசாமல் இந்தயப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துக்கொள். உன்னிடம் உண்மையாக இருப்பாள்.  உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவாள்”

இதற்குப் பொருந்துமாறு ஒரு திருமண பந்தத்தை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் சொன்ன கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தியப் பெண்களின் இந்தப்  பக்குவமும்,  மன உறுதியும் , அவர்கள் கட்டிக்காக்கும் பொறுமையும் தான் உலகம் முழுவதும் அவர்கள் விரும்பப்படுவதற்குக் காரணம்.

இந்தப் பகுதியிலிருந்து சிவபாலனின் கதை தொடங்குகிறது.சிவாவின் வாழ்க்கையில்  நர்த்தனாவின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

கடவுள் அமைத்த மேடை – 15

படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டு அத்தியாயத்தில் கதை முடிகிறது.

 

அன்புடன்,

தமிழ் மதுரா

கடவுள் அமைத்த மேடை – 14

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. பலர் கதையை ஊகித்து சொல்லியிருந்தீர்கள். அது சரியா என்று இந்த பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள். டைவேர்ஸ் செய்வதற்கு இதெல்லாம் காரணமாக ஏற்க முடியுமா என்று கேட்டிருந்தீர்கள். மனித மனம் மெல்லிய உணர்வுகளைக் கொண்டது. உணவும் உடையும் மட்டும் மனதிற்குப் பத்தாது உரிமையுள்ளவர்களிடம் அன்பு, பாசம், அரவணைப்பு, காதல்  எல்லாம் எதிர்பார்க்கும். அது கிடைக்கத் தவறினால் தகராறுதான்.

கணவன் மனைவிக்கு பிரச்சனை எதுவும் இல்லாமல் உறவினர்களின் கலகத்தால் பிரிந்த குடும்பம் எத்தனையோ இருக்கிறது. சுமன், தாய்க்கும் தங்கைக்கும் முக்கியத்துவம் தந்ததில் தவறில்லை. ஆனால் வைஷாலிக்கு  நல்ல கணவனாக இருந்தான் என்று நினைக்கிறீர்களா? சுமனை வில்லனாக ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அங்கிதாவைக் கண்மூடித்தனமாக நம்புகிறான். அதில் சிறு சதவிகிதமாவது அவனே கதியாய்  வந்த மனைவி மேல் வைத்திருக்கலாம்.

நம் நாயகிக்கு  நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதுதான் எனது வேண்டுதலும்.

இன்றுடன் வைஷாலியின் ப்ளாஷ்பேக் முடிந்து சிவபாலனின் கதை ஆரம்பிக்கிறது.

கடவுள் அமைத்த மேடை 14

அன்புடன்

தமிழ் மதுரா

கடவுள் அமைத்த மேடை – 13

ஹாய் பிரெண்ட்ஸ்,

கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. இன்றைக்கு சற்றே பெரிய அப்டேட். முக்கியமானதும் கூட. உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

கடவுள் அமைத்த மேடை 13

அன்புடன்,

தமிழ் மதுரா.

கடவுள் அமைத்த மேடை – 12

வணக்கம் பிரெண்ட்ஸ்,

கடவுள் அமைத்த மேடை போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. கதை எப்படி போகும் என்று சில கெஸ் எனக்கு அனுப்பியிருந்தீர்கள். உங்களது ஊகம் சரிதானா என்று இனி வரும் இரு பதிவுகளில் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய பகுதியில் புகுந்த வீட்டில் வைஷாலி பற்றி பார்ப்போம். படித்துவிட்டு ஒரு வரி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

கடவுள் அமைத்த மேடை – 12

அன்புடன்,

தமிழ் மதுரா.

உன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்

வணக்கம் பிரெண்ட்ஸ்,

ப்ரித்வி, நந்தனாவுடன் பானுப்ரியாவும் உங்களை சந்திக்க வருகிறாள். உங்கள் மனம் கவர்ந்த நாவல்கள் ‘உன்னிடம் மயங்குகிறேன்’ மற்றும் ‘வார்த்தை தவறிவிட்டாய்’  ஒரே புத்தகமாக ‘மூவர் நிலையம்’ பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருகிறது. உடுமலையில் இந்தப் புத்தகம் கிடைக்கும். ப்ளாகில் தந்த ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

vtvi

அன்புடன்,

தமிழ் மதுரா.