“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

Archive for October, 2014

வார்த்தை தவறிவிட்டாய் – 14

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு நீங்க தந்த கமெண்ட்ஸ்க்கு நன்றி. இப்போது அடுத்த பகுதியை பார்க்கலாம். படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா

வார்த்தை தவறிவிட்டாய் – 14

அன்புடன்,

தமிழ் மதுரா

Advertisements

வார்த்தை தவறிவிட்டாய் – 13

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பகுதியில் பானுவுக்கு நீங்க தந்த சப்போர்ட் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். நன்றி நன்றி. ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நிதர்சனத்தை பிரதிபலிப்பதாகவும், பானுவின் கதாபாத்திரம் மிக நன்றாக இருப்பதாய் நான் பெரிதும் மதிக்கும்  பெரியவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் கமெண்ட்ஸ் வந்தது. எனக்கு சந்தோஷத்தில் வார்த்தைகளே மறந்துவிட்டது. என்னை செதுக்கிய என் தோழிகளுக்கு (படிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும்தான்  சொல்றேன்) Millions of thanks.

போன பகுதியின் பாட்டு பிடிச்சிருக்குறதா  நிறைய பேர் மெசேஜ் அனுப்பிருந்திங்க.  ‘மான் கண்ட சொர்க்கங்கள், போகப் போக யாவும் வெட்கங்கள்’ இது நம்ம பானுப்ரியாவுக்கும் பொருந்தும்.

இன்றைய பகுதி மிக முக்கியமானது. எஸ், பிரகாஷ் பானு சந்திப்பு. படிங்க படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. பானுவின் முடிவு பற்றி போன பகுதிக்கு நீங்க தெரிவித்த கருத்தில் ஏதாவது மாற்றம் உண்டான்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன்.

வார்த்தை தவறிவிட்டாய் – 13

அன்புடன்,

தமிழ் மதுரா

 

வார்த்தை தவறிவிட்டாய் – 12

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கும் லைக்ஸ் போட்டவர்களுக்கும் நன்றிகள் பல.

திக்கற்று நின்ற பானு ‘எவ்வழி செல்வாளோ, எவ்விதம் செல்வாளோ’ என்று பதைபதைத்த உள்ளங்கள் அவளது முடிவினைக் கண்டு மகிழ்ந்தீர்கள் என்று உங்களது எழுத்துக்களின் வாயிலாக அறிந்தேன்.  அவள் ஸெல்ப் பிட்டியிலிருந்து வெளிவந்து நடக்கப் போவதை எதிர்கொள்ளத் தயாராகிறாள்.  இனி கதைக்கு செல்வோமா

வார்த்தை தவறிவிட்டாய் – 12

அன்புடன்,

தமிழ் மதுரா.

வார்த்தை தவறிவிட்டாய் – 11

ஹாய் பிரெண்ட்ஸ்,

நேற்றைய பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிப்பா. பானு யாரைப் பார்க்கப் போறான்னு தெரிஞ்சுக்க நீங்க எல்லாரும் ஆவலா இருப்பிங்க. படிங்க படிச்சுட்டு அவள் தேர்ந்தெடுத்த பாதை பற்றிய உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க

வார்த்தை தவறிவிட்டாய் – 11

அன்புடன்,

தமிழ் மதுரா

வார்த்தை தவறிவிட்டாய் – 10

ஹாய் பிரெண்ட்ஸ்,

தீபாவளி நல்லா கொண்டாடினிங்களா. எனக்கு உங்க எல்லாரோட வாழ்த்துக்களும், பரிசும் கிடைச்சது. நன்றி. உங்களை மாதிரியே நானும் பண்டிகை வேலைகளில் பிஸியா இருந்தேன். கேரக்டர் பத்தின விளக்கத்தை  சில பேர் என்னிடம் டிஸ்கஸ் பண்ணிங்க. நான் படித்த சில வாசகங்களை பகிர்ந்துக்க விரும்புறேன்.

Let us not say, Every man is the architect of his own fortune; but let us say, Every man is the architect of his own character.
George Dana Boardman

Parents can only give good advice or put them on the right path, the the final forming of a person’s character lies in their own hands.
Anne Frank

பெற்றோர் என்பதுடன் படிப்பு என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். நல்ல பெற்றோர், நல்ல சூழ்நிலையில் இருப்பவர்கள் கூட வழி தவறுவது எதனால்… இந்த கேள்விக்கு இந்த ஜென் தத்துவத்தின் பதில் – உங்களது மனது தவறான திசையில் போகத் தொடங்கும்போதே உங்கள் வாழ்க்கையும் பாதை தவறிவிடுகிறது என்று சொல்கிறது. அதைத் தடுக்க மனதை ஆரம்பத்திலேயே அடக்கி கட்டுக்குள் வைத்திருங்கள் என்று சொல்கிறது. சிறு வயதிலிருந்தே பள்ளியில் கற்பிக்கப் படும் நீதிபோதனை வகுப்புக்கள் ஓரளவு உதவி செய்யும் என்று தோன்றுகிறது. மனதை அடக்க வேறு வழிமுறைகள் தெரிந்தால் சொல்லுங்களேன்.

படிங்க… படிச்சுட்டு உங்க கருத்துக்களைத் தவறாம பகிர்ந்துக்கோங்க.
அன்புடன்,
தமிழ் மதுரா

வார்த்தை தவறிவிட்டாய் – 9

ஹாய் பிரெண்ட்ஸ்,

முதலில் உங்க எல்லாருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பலகார வாசனையும் பட்டாசு சத்தமுமாய் தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

இப்ப கதைக்கு வருவோம்

உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி நன்றி. போன பகுதி பற்றிய ஆதங்கக் குரல் என் செவிக்கு எட்டியது.  இனி பானு என்ன செய்வா? சண்டை பிடிப்பாளா?   வீட்டை விட்டு வெளிய போய்டுவாளா? இப்படி பல கேள்விகள்.

அம்மா வீட்டு ஆதரவு இல்லை. படிப்பு மறந்தே போயிடுச்சு. வெளிய அலைஞ்சு வேலை தேடிக்கிற தகுதியோ திறமையோ  இல்லை. இந்த தமிழ் மதுரா இப்படி ஒரு கதாநாயகியத் தந்திருக்க வேண்டாம். சரயுவோட சூட்டிகைல பாதியாவது பானுவுக்கு இருந்திருக்கலாம்னு கம்பேர் செய்து என்கிட்டே ஆதங்கப் பட்டிருந்திங்க. சரயு அம்மா அப்பா இல்லாம தானே போராடி ஒவ்வொரு படியா முன்னேறினா. அவள் வாழ்க்கையில் பட்ட அடிகள் அவளை தைரியமாக்கியது.

பானுவோ அம்மா அப்பா என்று பாதுகாப்பான கூட்டில் வளர்ந்து, தகப்பனால் பத்திரமாய் ஒரு நல்ல குடும்பத்தில் ஒப்படைக்கப் பட்டாள். அவளுக்கு பெரும்பாலான பெண்களைப் போல குடும்பமே  உலகம். இப்படிப்பட்ட பெண் கணவனின் துரோகத்தை எதிர்கொள்ளும் நிலைமை வந்தால்….

இந்தப் பகுதிக்கு  பலம் சேர்ப்பது   பத்மா க்ரஹாமின் கவிதைகள். ஒவ்வொரு வரியும் ரசிக்க மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கிறது. ‘வார்த்தை தவறிவிட்டாய்’ கதையை நான் தொடங்க நினைத்த நேரம், முகநூலில் அவரது கவிதைகள் சிலவற்றைப் படித்து அசந்துவிட்டேன். ஏனென்றால் அவை அப்படியே பானுவின் மனநிலையைப் பிரதிபலித்தது. பத்மா எனக்குக் கவிதைகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்ததுடன். புதிதாகவும் சில கவிதைகளையும் உங்களுக்காக எழுதியிருக்கிறார்.  பத்மா உங்களது கவிதைகளுக்கு மிக்க நன்றி.

Mirror, Mirror on my wall
I want to be pretty, thin and tall

Mirror Mirror if I change my hair
May someone will start to care?

Mirror Mirror if I starve myself,
At least I will be beautiful, forget my health

Mirror Mirror if I cut my wrist,
Will I feel like I exist.

இது காதலில் தோல்வியுற்ற பெண் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்பதைப் போன்று வரும். இந்தக் கவிதையை தமிழில் பானுவுக்காக வடித்துக் கொடுத்திருக்கிறார். படித்துப் பாருங்கள். இந்த ஆங்கிலக் கவிதையை விட அதிகமான தாக்கத்தை பத்மாவின் கவிதை தரும்.

வார்த்தை தவறிவிட்டாய் – 9

நீங்க படிச்சுட்டு சொல்லப் போகும் கமெண்ட்ஸ் கேட்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

 

வார்த்தை தவறிவிட்டாய் – 8

ஹாய் பிரெண்ட்ஸ்,

நன்றி நன்றி நன்றி. உங்களோட கருத்துக்களையும் ஆதங்கத்தையும் படிச்சேன். தினந்தோறும் செய்திகளையும், கண்ணால் பார்த்த, காதால் கேட்ட நிகழ்வுகளையும் கோர்த்தே ‘வார்த்தை தவறிவிட்டாய்’ உருவானது.

நீங்களும் இதே போல் நிறைய சம்பவங்களைக் கேள்விப்பட்டிருகிறீர்கள் என்பதை நீங்கள் எனக்கு அனுப்பிய செய்தியின் வாயிலாகத் தெரிந்துக் கொண்டேன். அந்த வகையில் ‘வார்த்தை தவறிவிட்டாய்’ ஒரு கதையாக இல்லாமல் பானுப்ரியா எனும் உங்கள்  தோழியின் வாழ்க்கையில் நிகழும் திருப்பமாய் நினைக்கிறீர்கள்.

கதையிலாவது அந்த வெகுளிக்கு  கண்டிப்பாய் நல்லது செய்ய வேண்டும் என்று உரிமையோடு கேட்டிருகிறீர்கள். உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். எனது பொறுப்பு அதிகமாகிவிட்டதாய் உணருகிறேன்.

இனி முக்கியமான இன்றைய பதிவுக்குப் போகலாமா

வார்த்தை தவறிவிட்டாய் – 8

அன்புடன்,

தமிழ் மதுரா