“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

Archive for July, 2014

Chitrangatha – Epilogue

அன்புள்ள பங்காரம்ஸ்,

உங்களை ரொம்ப காக்க வைக்க விரும்பல. முதலில் எபிலாக்.  உங்க கூட பேசி ரொம்ப நாளாச்சு. எபிலாக் முடிஞ்சதும் பேசலாம்.

Chitrangatha – Epilogue

சித்ராங்கதா இறுதிபகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்கா.

எல்லா கதைகளுக்கும் செய்த மெனக்கெடலுக்கு கொஞ்சம் அதிகமாவே  இந்தக்கதைக்கு செய்தேன். ஆனால் சித்ராங்கதா எனக்கு ரொம்ப ஸ்பெஷல்…  ஏனென்றால் இந்த சாதாரண கதைசொல்லிக்கு அவ்வளவு அன்பை சம்பாதித்துத் தந்திருக்கிறது.

நீண்ட நாட்களாய் சரயு என்னை எழுத்தில் வடிக்கச் சொல்லித் தொல்லை தந்தாள்.அப்போது உதயமானதுதான் சித்ராங்கதா. ஒரு டாம்பாயை காதலித்து மணந்த அர்ஜுனன்.அர்ஜுனன் நிறை குறைகள் நிரம்பிய சாதாரண மனிதன். அப்படித்தான் ஜிஷ்ணுவின்கதாபாத்திரம் இருக்கும். ஆனால் மறந்துவிடாதீர்கள் அந்த சாதாரணமனிதனுக்குத்தான் கிருஷ்ணன் சாரதியாய் நின்றான்.

ஜமுனாவுடன்திருமணம் முடிந்தும் சரயுவின் மீதான  அவனது காதலை நீங்கள் ஏற்பீர்களாஎன்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் மிக அற்புதமாய் புரிந்துக் கொண்டீர்கள்.நான் நினைப்பதை அப்படியே புரிந்து கொண்டதற்கும் உணர்ந்தததற்கும் நன்றி. சிலதோழிகள் சிலபடி அதிகம் போய் என் அலைவரிசையிலேயே சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். அதுதான் ஆச்சிரியம்.

இந்தக் கதைஆரம்பத்திலிருந்து என்னுடன் பயணித்து,  ஒவ்வொரு அத்தியாயத்திலும் சலிக்காமல் செப்பனிட்ட எழுத்தாளர் வனிதா ரவிச்சந்திரனுக்கு என் முதல் நன்றி. வனிதா நான் முதல் அத்யாயம் போட்டதுமே கதையை அப்படியே சொல்லிடுவார். இன்னும் பெட்டரா, பெட்டரா பண்ணு என்று என்னை டிரில் வாங்கிடுவார். தப்புகள் சரியாய்அவர் கண்ணில் படும். நானும் திருத்தி விடுவேன். சுருக்கமாய் சொல்லப் போனால் என் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட டீச்சர். இந்தக் கதையை அவர் கெஸ் பண்ணக்கூடாதுன்னு நினைச்சே எழுதினேன். முதல் முறையா ஓரளவு வெற்றி. நன்றி வனிதா உங்கள் உதவிக்கு.

அடுத்த நன்றி விஜிசுஷிலுக்கு. பதினைந்து பகுதிகள் வரை என் அரைகுறை தெலுகுலேயே ஓடியது.யாராவது தெலுகு அண்ட் தமிழ் தெரிந்தவர் இருந்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாக  இருக்கும் என்று நினைத்தேன்.ஒரு பெரிய வலையை எடுத்துட்டு தேடாதகுறை.

விஜியை முன்பே எனக்குத் தெரியும். விஜியோட கதைகளைப் படிச்சிருக்கேன். பேசிருக்கோம். ஆனா இந்த விஜிதான் விமர்சனம் எழுதுற ரவளிக்கா என்ற ராணுவ ரகசியத்தை என்கிட்டே மறைச்ச கள்ளியை  என்ன செய்யலாம்? விஜிகிட்ட “பேர் ரவளிக்காவா? அப்ப நீங்க  தெலுகா”ன்னு நான் கேக்க, விஜிட்ட இருந்து  என்ன ரிப்ளை தெரியுமா “நான் இந்தியன்”.  ‘வாம்மா மின்னல் உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன்’ அப்படின்னு அன்னைக்கு விஜியை சித்ராங்கதாவுக்குள்ள இழுத்துப் போட்டதுதான். இன்னைக்கு வரைக்கும் விடுதலை இல்லை. உங்களது சுந்தரத் தெலுங்கு இந்தக் கதையின் மிகப் பெரிய பலம் விஜி. நன்றி.

இந்தக் கதைக்கு ஆர்வமா பாட்டுக்களை, சஜசன்ஸ் தந்த தோழிகள், ஜெயசுதாவின் நோய் பற்றி விளக்கம் கேட்டதற்கு உடனே பதில் அனுப்பிய டாக்டர்.உமா,   கவிதையாய் கமெண்ட்ஸ்எழுதும் நீங்க,  கதையாய் நினைக்காமல் சரயுவையும் ஜிஷ்ணுவையும் உங்க நண்பர்களா தெரிஞ்சவங்களா நினைச்சு அவங்களுக்காக சண்டை போட்டவங்க. ஜிஷ்ணுவுக்கு காதல் கடிதம் போட்டு  என்னை போஸ்ட்மேன் ஆக்கினவங்க, சரயுவை ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம்னு கேட்டுகிட்டே ஆண் வாசகர்கள்,  வழக்கமா ஜிஷ்ணுவுக்குத்தான் வரும் இப்ப கொஞ்சம் மாத்தி என்னை பிடிச்சிருக்குன்னுசொன்னவங்க(கடவுளே இப்படியெல்லாம் அப்பாவிப் பிள்ளைங்க இருக்கே) எல்லாத்துக்கும் மேல விஷ்ணு சரயு ஒண்ணு சேரணும்னு பெருமாளை வேண்டிக்கிட்டவங்க  இப்படி சொல்லிட்டே போகலாம்.  இந்தக் கதையின் வெற்றிக்கு நீங்க எல்லாரும்தான்  காரணம் .

வாசகர்கள் மட்டுமின்றி என் தோழிகளான எழுத்தாளர்களும் விரும்பிப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். அதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

பலரை எனக்கும், என்னைப் பலருக்கும் அறிமுகப்படுத்திய பெருமை  சித்ராங்கதாவுக்கே…

அப்பறம் ஒரு வேண்டுகோள். என் மேல் கொண்ட அன்பால் இந்தக் கதையை காவியம்னு சொல்லுறிங்க. ஒருவேளை என்னோட மத்த கதைகளை படிக்கும் போது இது பெட்டரா தெரிஞ்சிருக்கலாம். அந்த வகையில் காவியம் எல்லாம் ஒண்ணு ரெண்டுதான் இருக்க முடியும். க.க.க.போகும்  உங்களுக்கு நான் சொல்ல வரது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அடுத்த கதையை, ஹீரோவை  சித்ராங்கதா கூட கம்பேர் பண்ணாதிங்க. ஒரு சரயு, ஒரு ஜிஷ்ணுதான் இருக்க முடியும். என்னால இவங்களோட ஆத்மார்த்தமான  காதலை பீட் பண்ணுற மாதிரி படைக்க முடியுமான்னு தெரியல.

உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். சித்ராங்கதா டீம் உங்களோட எண்ணங்களைத் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம்.  சரயு, ஜிஷ்ணுவோட சேர்ந்து நானும் உங்ககிட்ட  உத்தரவு வாங்கிக்கிறேன்.  மீண்டும்  சந்திப்போம்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

Advertisements

Chitrangatha – 61,62

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சித்ராங்கதா… இந்தக் கதையின் முடிவுப் பகுதிக்கு வந்துவிட்டோம்… அறுவது அத்யாயங்கள் ஓடி விட்டன, 48வது பகுதியிலேயே   ராம் யார், அபி யார், சரயு ஜிஷ்ணுவுக்கு என்ன உறவு போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடை தெரிந்துவிட்டது. இருந்தும் ஆவலாய் படித்து சலிக்காமல் என்னை ஊக்குவித்து, சிறு சிறு குறைகளையும் கவனக் குறைவுகளையும் அன்பாய் சுட்டிக் காட்டி, நீங்கள் தந்த சப்போர்ட்டுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..  பல சமயம் கதையை விட நீங்கள் எழுதும் கமெண்ட்ஸ்  நன்றாக இருப்பதாய் நினைத்திருக்கிறேன். எனது எழுத்தார்வத்துக்கு உங்களது பின்னூட்டம் மிகப் பெரிய தூண்டுகோல். கமெண்ட்ஸ் எழுதும் ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் ஒரு எழுத்தாளர் மறைந்திருப்பதைப் பார்த்து வியக்கிறேன்.

வெப்சைட்ஸ்-ல் சித்ராங்கதாவுக்குப்  பொருத்தமான ஹீரோ ஹீரோயின் தேடல்களைப்  பார்த்தேன். ஜிஷ்ணுவும் சரயுவும் இந்த அளவுக்கு உங்களைக் கவர்ந்திருப்பது மகிழ்ச்சி.

இப்ப கடைசி அத்யாயங்கள்

Chitrangatha – 61,62

அப்பறம் வணக்கம் போட்டுட்டாங்கன்னு தியேட்டரை விட்டுட்டு கிளம்பிடாதிங்க உங்களுக்காக போனஸா ஒரு எபிலாக் வந்துகிட்டே இருக்கு. அதுவும் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.

 

அன்புடன்,

தமிழ் மதுரா