“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

Archive for February, 2014

Chitrangathaa – 22

chitrangathaa – 22

ஹலோ பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. உங்க கேள்விகள் எல்லாத்தையும் படிச்சேன். அதுக்கு விடைகள் ஒவ்வொண்ணா பார்க்கலாம்.

சரயுவோட அன்பை, காதலை புரிஞ்சுகிட்டிங்க. சின்ன குழந்தை மாதிரி இருக்கு அவ அன்புன்னு சொன்னிங்க. ஜிஷ்ணுவின் அன்பைக் கூர்ந்து கவனிச்சிங்கன்னா அதிலும் சரயு மேல அவனுக்கிருக்கும் கல்மிஷமில்லாத அன்பும், அக்கறையும் சேர்ந்து வெளிப்படும். இவர்களோடது மனம் சார்ந்த காதல், சிறு வயதில் ஆரம்பித்து அவர்கள் நேசம் படிப்படியாய் வளர்ந்துக் காதலா கனிஞ்சிருக்கு. இதில் ஜிஷ்ணு அவளை அக்கரையாத்தான் பார்க்க முடியும். காதல் பார்வைப் பார்த்தால் இதுவரை ஜிஷ்ணு அவள் மேல் செலுத்திய அன்பே கேள்விக்குறியாகி விடும்.

இதுதான் காதல் இப்படித்தான் காதலிருக்கும்னு ஒரு definition காதலுக்குக் கிடையாது என்பது என் கருத்து. சரயு-ஜிஷ்ணு காதல்தான் சிறந்தது அப்படின்னும் சொல்ல மாட்டேன். ஆனால் நீங்கள் ஆச்சிரியத்தோடு பார்க்கும் உலகின் தலை சிறந்த காதலுக்கு எந்த வகையிலும் இந்த அன்பு குறைந்ததில்லைன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு சொல்லுங்களேன்.

உங்களோட மிகப் பெரிய கேள்வி இவ்வளவு அன்பு செலுத்தின இவங்க ஏன் பிரிஞ்சாங்க? அதுக்கான விடைதான் இன்னைக்கு அப்டேட். இந்தப் பகுதியை நிஜம்மாவே வலியோடதான் எழுதினேன். என்னோட எல்லாக் கதைகளிலும் என் கூடவே வந்து எனக்கு தக்க சமயத்தில் ஆலோசனையும் திருந்தங்களையும் சொல்லும் வனிதாவுக்கும் இந்தப் பகுதி திருப்தி (அவங்க என்னோட தோழி மட்டுமில்ல என்னுடைய மிகப் பெரிய விமர்சகர் கூட… ). நன்றி வனிதா.உங்களது நேரத்துக்கும் ஆலோசனைக்கும்.

நான் முன்னாடியே சொன்ன மாதிரி, என் தெலுகைப் படிச்சா… ஆந்திராவில் யாராவது சீத்தலைசாத்தனார் இருந்தா எழுத்தாணியால தலைல குத்திட்டுப் பிராணஹித்தி செய்திருப்பார். நான் என்னதான் வலியோட எழுதினாலும் விஜி சுஷில் கைபட்டு அது தெலுகில் வரும்போது ஜிஷ்ணுவே எனக்கு வேற மாதிரி தெரியுறான். இன்றைய பகுதியில் அவன் பேசினதைக் கேட்டு என் கண்களிலும் நீர். நன்றி விஜி.

சித்ராங்கதா கொஞ்சம் பெரிய கதையாவே வந்துட்டு இருக்கு. உங்களை கதையோட ஒன்ற வைக்க எனக்கு நேரம் தேவைப் பட்டது. இந்தப் பகுதி இடைவேளைன்னு(பகுதி ஒன்றுன்னு கூட நீங்க சொல்லிக்கலாம்) வச்சுக்கலாம். இனிமே மற்ற முடிச்சுகள் அவிழ்க்கப்படும்.

இப்ப சொல்லுங்க…. கதை பிடிச்சிருக்கா? சரயு உங்களைக் கவர்ந்தாளா? விஷ்ணு/ஜிஷ்ணு உங்களைக் கவர்ந்தானா? உங்களோட கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க. கதையின் ஒவ்வொரு அப்டேட்டிலும் என்னோட நேரம் மட்டுமில்லாமல் என் குடும்பத்தோட நேரமும் இருக்கு.ஏன்னா அவர்களுக்குத் தர வேண்டிய நேரத்தைத்தான் உங்களுக்குத் தருகிறேன். நீங்க பதிலுக்கு ஒரு வார்த்தை எழுதினால் நான் போகும் பாதை சரியா தவறா என்று கணிக்க எனக்கு வசதியாய் இருக்கும்.

அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா.

Advertisements

சித்ராங்கதா – 21

Chitrangatha – 21

ஹலோ பிரெண்ட்ஸ்,

உங்க கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன். அனைவருக்கும் ஆயிரம் கோடி நன்றிகள். ஜிஷ்ணு சரயுவைக் காதலிக்கிறதை எல்லாரும் உணர்ந்திங்க. உங்களில் சிலருக்கு சரயுவுக்கு ஜிஷ்ணு மேலிருக்கும் அன்புக்குப் பேரென்ன என்று கேள்வி இருக்கு. அதை இன்னைக்கு சரயுவே சொல்லுறா. இதைப் படிச்சவங்க ரொம்ப ரசிச்சாங்க, அவள் சொல்லும் காரணத்தை முழு மனதா ஏத்துகிட்டாங்க. நீங்களும் எத்துக்குவிங்கன்னு நினைக்கிறேன். சரயுவைக் காதலிக்க ஆரம்பிச்சதும் எப்படியிருந்த ஜிஷ்ணு எப்படி ஆயிட்டான்னு பாருங்களேன். படிச்சுட்டு ஒரு வார்த்தை எழுதுங்க. நான் பதிலா என்னோட அடுத்த அப்டேட்டை சீக்கிரம் தர முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா.

சித்ராங்கதா – 20

Chitrangatha – 20

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும், மற்றும் மெயிலில் தங்களது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்ட தோழிகளுக்கும் நன்றி. உங்க எல்லாருக்கும் இருக்கும் சரயு – ஜிஷ்ணு இருவரின் பந்தத்தைப் பத்தின அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் பகுதி இது. இதுக்கு bgm ஏன் தெலுகுன்னா நம்ம அதிக சந்தோஷப்பட்டாலோ துக்கப்பட்டாலோ தாய்மொழிலதான் வார்த்தைகள் வரும். நம்ம ஜிஷ்ணு மனதைச் சொல்ல இந்தப் பாட்டு.

அப்பறம் பாஸ்கட்பால் மாட்ச் ஒண்ணு இந்தப் பகுதில வருது. முடிஞ்சா அளவு எளிமையா தர முயற்சி செய்திருக்கேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

கொஞ்சம் பெரிய அப்டேட் தான். படிங்க, படிச்சுட்டு உங்க எண்ணத்தை சொல்லுங்க. கேட்க ஆவலா இருக்கேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா

சித்ராங்கதா – 19

Chitrangatha – 19

ஹலோ பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இந்த அப்டேட் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜிஷ்ணு, சரயு இருவரும் தாங்கள் ஒருவரின் மேல் ஒருவர் கொண்டுள்ள அக்கறையை உணர்கிறார்கள். நீங்களும் கூடத்தான். இவர்களில் யாருக்கு யார் மேல் அன்பு அதிகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? படித்துவிட்டு உங்கள் கருத்தினை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா

சித்ராங்கதா – 18

Chitrangatha – 18

ஹலோ பிரெண்ட்ஸ்,

எல்லாரும் காதலர் தினக் கொண்டாட்டத்துல பிஸியா இருப்பிங்கன்னு நினைக்கிறேன். சரயுவும் ஜிஷ்ணுவும் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்துட்டாங்க.

போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்டதுக்கு நன்றி பிரெண்ட்ஸ். சக தோழிகளான எழுத்தாளர்களும் படித்து என் முகநூலிலும், ப்ளாகிலும், மெயிலிலும் கருத்துத் தெரிவிப்பது எனக்கு மிகவும் சந்தோஷம். உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி .

நன்றி செலுத்தும் விதமாகத்தான் சீக்கிரமாய் பதிவுகளைக் கொடுக்கிறேன் (‘ரிப்ளையை விட கதைதான் முக்கியம், சீக்கிரம் அப்டேட்ஸ் வேணும். அந்த நேரத்துல ஒரு அப்டேட் தாங்க’ என்று ஒரு தோழி சொல்லியிருக்கிறார்). கதை முடிந்ததும் வழக்கம்போல் நம்ம பேசலாம்.

போன பதிவு மிகவும் கனமா இருந்ததால இப்ப மனசுக்கு லேசா ஒரு பதிவு. படிச்சுட்டு உங்க கருத்துக்களைத் தவறாம பகிர்ந்துக்கோங்க.

அன்புடன்,
தமிழ் மதுரா.

சித்ராங்கதா – 17

Chitrangathaa – 17

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சரயுவுக்கும் ஜிஷ்ணுவுக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. உங்களது கமெண்ட்ஸ் படித்தேன். உங்களது எண்ணங்களைத் தெரிவித்து நீங்கள் அனுப்பிய முகநூல் மெசேஜ் மற்றும் பர்சனல் மெயில்களுக்கு ஓராயிரம் நன்றி. இந்தக் கதையில் நீங்கள் காட்டும் ஈடுபாடும் ஆர்வமும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் அதே நேரத்தில் உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமே என்ற கவலையையும் தருகிறது.

இன்றைய பகுதியில் சரயு எதிர்கொள்ளப் போகும் மற்றொரு பிரச்சனை பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறேன். உங்களோட எண்ணற்ற கேள்விகளில் ஒன்றிற்கு இந்தப் பகுதியில் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சரயு ப்ளாஷ்பேக்கில் இனிதான் தனது இருண்ட காலத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறாள். தாயில்லாத குறையை இனி காலம் அவளுக்கு வலிக்க வலிக்க உணர்த்தப் போகிறது. அவளுக்கு உங்கள் அனைவரின் சப்போர்ட் கண்டிப்பாகத் தேவை. தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை இடுகிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா

சித்ராங்கதா – 16

Chitrangathaa – 16